ஹோம் /நியூஸ் /நீலகிரி /

புலிகள் நடமாட்டத்தால் நடுங்கும் மக்கள்..! வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புலிகள் நடமாட்டத்தால் நடுங்கும் மக்கள்..! வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

ஊட்டியில் குடியிருப்பு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பசுமாட்டை புலி ஒன்று வேட்டையாடிய நிலையில், மீண்டும் அப்பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உதகை அருகே மீண்டும் புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  உதகை அருகே  இந்து நகர் பகுதியில் கடந்த வாரம் பொதுமக்கள் மத்தியில், பசுமாடு ஒன்றை புலி அடித்து கொன்று சாப்பிட்டது. இதனை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.இதனை வீடியோவாக பதிவு செய்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு ஆதாரத்துடன் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் 4 தானியங்கி கேமராக்களை பொருத்தி புலி நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

  இந்த நிலையில், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில், கடந்த 4 நாட்களாக புலி நடமாட்டம் பதிவாகாத நிலையில் பட்பையர் என்னும் பகுதியில் பசுமாட்டை வேட்டையாடுவதற்காக புலி ஒன்று காத்திருப்பதை வடமாநில தொழிலாளர்கள் பார்த்துள்ளனர்.

  Also read | ஊட்டியில் மழை, பனிமூட்டம்... வாகன ஓட்டிகள் அவதி..!

  கூட்டமாக இருப்பதை கண்டு புலி காட்டுக்குள் ஓடியுள்ளது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர்,  புலி வந்ததை உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து புலியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

  செய்தியாளர்: ஐயாசாமி, ஊட்டி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Ooty, Tiger