ஹோம் /நியூஸ் /நீலகிரி /

ஓட ஓட விரட்டி காட்டுபன்றியை வேட்டையாடிய புலி.. நேரில் பார்த்து நடுங்கிய சுற்றுலா பயணிகள்..!

ஓட ஓட விரட்டி காட்டுபன்றியை வேட்டையாடிய புலி.. நேரில் பார்த்து நடுங்கிய சுற்றுலா பயணிகள்..!

காட்டு பன்றியை வேட்டையாடிய புலி

காட்டு பன்றியை வேட்டையாடிய புலி

காட்டுப்பன்றியை வேட்டையாடிய புலியை சுற்றுலா பயணிகள் அச்சத்தோடு வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய புலியின் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து மைசூர் பந்திப்பூர் வரை அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. நாள்தோறும் இந்த வனப்பகுதி வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்திலிருந்து மைசூருக்கும், அதேபோல் மைசூரிலிருந்து தமிழகத்திற்கும் அடர்ந்த வனப்பகுதி வழியாக வாகனங்கள் செல்கின்றன.அடர்ந்த வனப் பகுதியை கொண்ட சாலையில் நாள்தோறும் யானை, மான், புலி, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள்  இயல்பாக நடமாடுவதை காண முடியும்.

  இந்நிலையில் இன்று காலை மைசூர் பந்திப்பூர் செல்லும் பிரதான சாலையில் உலா வந்த புலி இறையைத் தேடி அலைந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றியை ஓட ஓட விரட்டி பிடித்து இறையாக்கி கொண்டது.

  இதையும் படிங்க | என்னா தூக்கம்..! - துயிலெழுந்த காட்டு யானையின் க்யூட் வீடியோ

  இதனை கண்ட சுற்றுலா பயணிகள் அச்சத்தோடு அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
   
  View this post on Instagram

   

  A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)  செய்தியாளர்: ஐயப்பன் ( நீலகிரி)

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Nilgiris, Ooty, Tiger