Home /News /nilgiris /

இஸ்ரோவின் செயற்கைகோள் தயாரிக்கும் வாய்ப்பை பெற்ற ஊட்டி பழங்குடியின மாணவர்கள்!

இஸ்ரோவின் செயற்கைகோள் தயாரிக்கும் வாய்ப்பை பெற்ற ஊட்டி பழங்குடியின மாணவர்கள்!

இஸ்ரோவில்  தமிழக பழங்குடியின மாணவர்கள்

இஸ்ரோவில் தமிழக பழங்குடியின மாணவர்கள்

ISRO AGASTHIYA : 75 வது சுதந்திர தின விழாவை போற்றும் வகையில் இஸ்ரோ சென்று அகஸ்தியர் செயற்கைக்கோளை நேரடியாக தயாரித்து ஏவ 75 மாணவர்களை தேர்தெடுக்கும் குழுவில் ஊட்டி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இஸ்ரோவின் அகஸ்தியர் மேகா செயற்கைகோளை தயாரிக்கும் வாய்ப்பை பெற்று அசத்தி இருக்கின்றனர் நீலகிரியை சேர்ந்த பழங்குடியின மாணவர்கள்.

    செல்போன், இன்டெர்நெட் வசதி இல்லை. ஏன் செயற்கைகோள் பற்றி பெரிய அளவில் அறிமுகமும் இல்லாத இந்த மாணவர்கள் இஸ்ரோவின் அகஸ்தியர் செயற்கைக்கோளை தயாரிக்கும் குழுவில் இணைந்து சாதித்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது கரிக்கையூர் மலை கிராமம். இங்குள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் 18 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அடர் வனப் பகுதியில் உள்ள கரிக்கையூர் பகுதியில் ஸ்மார்ட் போன், இன்டர்நெட் என எந்த வசதியும் கிடையாது.



    இந்த நிலையில் பத்ம ஸ்ரீ சிவதாணுப்பிள்ளை தலைமையில் 75 வது சுதந்திர தின விழாவை போற்றும் வகையில் இஸ்ரோ சென்று அகஸ்தியர் செயற்கைக்கோளை நேரடியாக தயாரித்து ஏவ 75 மாணவர்களை தேர்தெடுக்கும் நடவடிக்கை தொடங்கியது.

    இஸ்ரோவின் "இளம் விஞ்ஞானி" பயிற்சி: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

    இதற்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில், கரிக்கையூர் பள்ளியில் இருந்து மாணவர்கள் ராஜன், ரேவதி ஆகியோர் தோந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இஸ்ரோவில் செயற்கைக்கோளை ஏவ தகுதி பெற்று தேர்வாகியுள்ள இரண்டு மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.



    தங்களது இந்த சாதனைக்கு தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரே பெரிதும் துணையாக இருந்ததாக மாணவர்கள் பெருமிதம் கொள்கின்றனர். மலை மாவட்டத்தில் பிறந்து சேட்டிலைட் என்றாலே என்ன என்று தெரியாத பழங்குடியின மாணவர்களை இஸ்ரோ வரை செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    சமவெளி பகுதியில் மாணவர்களுக்கு எளிதாக கிடைக்கும் இது போன்ற வாய்ப்புகள், மலைமாவட்டத்தில் பழங்குடியினர் மாணவர்களுக்கு கிடைப்பது என்பது அரிது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து தற்போது இஸ்ரோ வரை சென்று செயற்கைக்கோள் தயாரிக்க தேர்வாகியுள்ள மாணவர்களால் பழங்குடியினர் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    செய்தியாளர்- ஐயப்பசாமி- நீலகிரி
    Published by:Ilakkiya GP
    First published:

    Tags: ISRO, Ooty, School students

    அடுத்த செய்தி