முகப்பு /செய்தி /நீலகிரி / பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு... தலைமையாசிரியர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட்!

பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு... தலைமையாசிரியர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட்!

மாதிரி படம்

மாதிரி படம்

Ooty News : ஊட்டியில் பள்ளி மாணவிகள் ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்ட விவகாரம் தொடர்பாக 2 பேர் பணியிடை நீக்கம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகை காந்தள் பகுதியிலுள்ள உருது பள்ளியில் கடந்த 6ம் தேதி 4 மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டனர். அப்போது மாணவிகள் 4 பேரும் திடீரென மயக்கமடைந்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காக 4 மாணவிகளும் கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில், அதில் ஜெயினபா (13) என்ற மாணவி

இன்று கோவையில் இருந்து உயர் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார். அப்போது சேலம் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக உதகையில் உள்ள உருது பள்ளியில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் முகமது அமீன், ஆசிரியர் கலைவாணி ஆகிய 2 பேரையும் கவனக்குறைவாக செயல்பட்டதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

First published:

Tags: Local News, Nilgiris