முகப்பு /செய்தி /நீலகிரி / மசாஜ் பண்ணலாம்.. உல்லாசமா இருக்கலாம் - விவசாயிக்கு வலைவிரித்து ஊட்டியில் சிக்கிய விபச்சார புரோக்கர்கள்

மசாஜ் பண்ணலாம்.. உல்லாசமா இருக்கலாம் - விவசாயிக்கு வலைவிரித்து ஊட்டியில் சிக்கிய விபச்சார புரோக்கர்கள்

விடுதியில் விபச்சாரம்  3 பேர் கைது

விடுதியில் விபச்சாரம் 3 பேர் கைது

Nilgiris News| உதகையில் தனியார் தங்கும் விடுதியில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட  3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகை பர்ன் ஹில் பகுதியை சேர்ந்த விவசாயி கோத்தகிரி சாலையில் உள்ள டீக்கடையில் டீ அருந்திக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த இளைஞர் ஒருவர் விவசாயியிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். தங்களிடம் பெண்கள் இருப்பதாகவும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மசாஜ், உல்லாசம் அனுபவிக்கலாம் என்று கூறியுள்ளார். இதனைக்கேட்ட விவசாயி அந்த இளைஞருக்கு ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அந்த இளைஞர் அழைத்து சென்ற ஹோட்டலில் நான்கு அறைகள் இருந்துள்ளது. இரண்டு அறைகளின் பெண்கள் இருந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் என்னிடம் போதிய பணம் இல்லை வீட்டில் இருந்து பணம் எடுத்து வருகிறேன் எனக் கூறி அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.

தனியார் விடுதியில் பெண்களை வைத்த விபச்சாரம் செய்வதாக உதகை மத்திய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த ஓட்டலில் சோதனை செய்துள்ளனர். அதில் 2 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த 2 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்ட புரோக்கர்கள் தென்காசியை சேர்ந்த சையது அலி ( 43), மேலூரை சேர்ந்த ரகுபதி (36), தூத்துக்குடியை சேர்ந்த அபுதாகீர் (47) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: ஐயாசாமி (நீலகிரி)

First published:

Tags: Crime News, Nilgiris, Ooty, Prostitution, Tamil News