ஹோம் /நியூஸ் /நீலகிரி /

600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் - உதகை தாவரவியல் பூங்காவில் தொடர் பரபரப்பு

600-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் - உதகை தாவரவியல் பூங்காவில் தொடர் பரபரப்பு

உள்ளிருப்பு போராட்டம்

உள்ளிருப்பு போராட்டம்

Ooty Garden Protest | தோட்டக்கலை துறை நிர்வாகம் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை முதல் தாவரவியல் பூங்காவிற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகை தாவரவியல் பூங்காவில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 600-க்கும் மேற்பட்ட பூங்கா மற்றும் பண்ணை  பணியாளர்கள்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பூங்கா பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காக்கள் உள்ளிட்ட 5 அரசு  பூங்காக்கள் மற்றும் நஞ்சநாடு, கல்லாறு, பர்லியாறு உள்ளிட்ட 9 அரசு பண்ணைகளில் 1200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 80% பேர் பணி நிரந்தரம் செய்யபடாமலும் தின கூலியாக  நாள் ஒன்றுக்கு 425 ரூபாய் மட்டுமே பெற்று பண பலன்கள் இன்றி பணியாற்றி வருகின்றனர்.

இதனையடுத்து 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி பண பலன்களை பிடித்தம் செய்ய வேண்டும், பணி மூப்பு அடிப்படையில் ஊக்க தொகை உயர்த்தி வழங்க வேண்டும், காலியாக உள்ள இடங்களை தற்காலிக பணியாளராக உள்ள தங்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப நிரப்ப வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு நிதித்துறை ஆணை படி தற்போது உள்ள தொழிலாளர்களை  பண்ணை பணியாளர்களை அங்கீகாரிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை அரசு தாவரவியல் பூங்கா முன் கடந்த 9-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டக்கலை துறை நிர்வாகம் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை முதல் தாவரவியல் பூங்காவிற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட 5 பூங்காக்களில் பணியாற்றும் தொழிலாளர்கள்  மற்றும் 9 அரசு பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

உடனடியாக தோட்டக்கலைத்துறை  தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் அவர்கள்  கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Local News, Ooty