ஹோம் /நியூஸ் /நீலகிரி /

நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ.. வீடியோவுக்கு போஸ் கொடுத்து மரத்தில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த சிறுத்தை..!

நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ.. வீடியோவுக்கு போஸ் கொடுத்து மரத்தில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த சிறுத்தை..!

மரத்தில் ஓய்வெடுத்த சிறுத்தை

மரத்தில் ஓய்வெடுத்த சிறுத்தை

வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தல்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

உதகை அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதியில் மரத்தில் ஒய்யாரமாக படுத்திருந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, மான், கரடி, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டிய சாலை ஓரங்களில் வன விலங்குகள் தென்படுவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆனைக்கட்டி பகுதியில் மரத்தில் ஒய்யாரமாக படுத்திருந்த சிறுத்தையின் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அந்த சிறுத்தை நான்கு கால்களையும் மரக்கிளையில் தொங்கபோட்டபடி ஒய்யாரமாக ஓய்வெடுத்து கொண்டிருந்தது.

பொதுவாக விலங்குகள் வாகன ஓட்டிகளின் சத்தத்தை கேட்டால் ஓடுவது வழக்கம். ஆனால் இந்த சிறுத்தை அவர்களை பார்த்தபடி ஓய்வெடுத்து கொண்டிருந்தது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதே போன்று, இரவு சிங்காரா செல்லும் சாலையில் புலி ஒன்று சாலையைக் கடந்து சென்றதை வாகன ஓட்டிகள் படம் பிடித்துள்ளனர் . இந்த வீடியோ வெளியானதையடுத்து, சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்தியாளர்: ஐயாசாமி, நீலகிரி

First published:

Tags: Leopard, Local News, Nilgiris, Tiger, Viral Video