ஹோம் /நியூஸ் /நீலகிரி /

கூடலூரில் சாலையில் உலா வந்த சிறுத்தை.. வாகன ஓட்டிகள் அச்சம்!

கூடலூரில் சாலையில் உலா வந்த சிறுத்தை.. வாகன ஓட்டிகள் அச்சம்!

சிறுத்தை

சிறுத்தை

வாகன ஒளியை கண்ட சிறுத்தை மெல்ல மெல்ல வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  கூடலூரில் இருந்து பந்தலூர் செல்லும் உப்பட்டி சாலையில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

  நீலகிரி மாவட்டத்தில் அடிக்கடி வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கூடலூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அதிக அளவிலான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனால் இங்கு வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் தேயிலை தோட்டங்களில் சிறுத்தைகள் அதிகமாக நடமாடுகிறது.

  இந்நிலையில் பந்தலூரில் இருந்து உப்பட்டி செல்லும் பிரதான சாலையில்  சிறுத்தை ஒன்று வாகன ஒளியை கண்டவுடன் சாலையைக் கடந்து அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்கு சென்றது.

  இதனை கண்ட வாகன ஓட்டி, அதனை வீடியோவாக படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

  இதையும் படிங்க | நெக்ஸ்ட்... ரெஸ்ட்டு... மசினகுடியில் மனிதர்களை போல ஹாயாக அமர்ந்திருந்த கரடி... போட்டோஸ்!

  சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  செய்தியாளர்: ஐயாசாமி, கூடலூர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Gudalur, Ooty