முகப்பு /செய்தி /நீலகிரி / "இனமென பிரிந்தது போதும்" - 3 மதங்களை சேர்ந்த 400 ஜோடிகளுக்கு திருமணம்! ஒவ்வொரு தம்பதிக்கும் ரூ.4 லட்சத்துக்கு சீதனம்!

"இனமென பிரிந்தது போதும்" - 3 மதங்களை சேர்ந்த 400 ஜோடிகளுக்கு திருமணம்! ஒவ்வொரு தம்பதிக்கும் ரூ.4 லட்சத்துக்கு சீதனம்!

400 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

400 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

Ooty marriage | மூன்று மாநிலங்களைச் சேர்ந்த மூன்று மதத்தை சார்ந்த 400 ஜோடிகளுக்கு உதகையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரியில் மூன்று மதத்தை சார்ந்த 400 ஜோடிகளுக்கு தலா 4 லட்சம் சீதனங்களோடு ஜாதி மத பேதமின்றி சமூக திருமணத்தை நடத்தி வைத்த இஸ்லாமிய அமைப்பினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பாடந்துறை பகுதியில் இஸ்லாமிய மதத்தை சார்ந்த மர்க்கஸ் என்ற அமைப்பு மூலம் வருடம் தோறும் சமூக திருமணத்தை நடத்தி வைப்பது வழக்கமாக உள்ளது. கடந்த வருடம் 200 பேருக்கு  திருமணம் நடத்தி வைத்த வந்த நிலையில் இந்த வருடம் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என மூன்று மாநிலங்களை சேர்ந்த சுமார் 400க்கு மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக கடந்த ஆறு மாத  காலமாக வறுமையில் வாடி வரும் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஜோடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதன்படி இன்று அந்த திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. 5 சவரன் தங்க நகை மற்றும் சீதனங்கள் உட்பட 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீதனங்கள் வழங்க இந்த திருமணம் ஜோராக நடத்தப்பட்டது.

400 ஜோடிகளில் 37 ஜோடிகளுக்கு அங்குள்ள மாரியம்மன் கோவிலிலும், மூன்று ஜோடிகளுக்கு கிறிஸ்துவ தேவாலயத்திலும், மீதமுள்ள 360 இஸ்லாமிய ஜோடிகளுக்கு அந்த அமைக்கப்பட்டிருந்த விழா திடலிலும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகாவை சேர்ந்த அந்த அமைப்பை சேர்ந்த உலமாக்கள் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இந்த அமைப்பு சார்பாக தோராயமாக 16 கோடி செலவில் வறுமையில் வாழ்ந்து வரும் 400  ஜோடிகளுக்கு இந்த அமைப்பு ஒரே இடத்தில் திருமணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: ஐயாசாமி, உதகை.

First published:

Tags: Local News, Marriage, Ooty