முகப்பு /செய்தி /நீலகிரி / பாத்ரூமுக்குள் சென்று விளையாடிய ஒன்றரை வயது குழந்தை.. வாளி நீரில் மூழ்கி பரிதாப பலி!

பாத்ரூமுக்குள் சென்று விளையாடிய ஒன்றரை வயது குழந்தை.. வாளி நீரில் மூழ்கி பரிதாப பலி!

பலியான குழந்தை

பலியான குழந்தை

ஓடியாடி விளையாடி கொண்டிருந்த குழந்தை வாளிக்குள் எட்டிபார்த்த போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

ஊட்டியில் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை வாளிக்குள் தவறி விழுந்து மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் ராஜா(32), அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரிஜோத் பானு (28). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த குழந்தை வீட்டு வராண்டாவில் விளையாடி கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து குழந்தை காணாமல் போனதை கண்டு பானு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடி பார்த்துள்ளனர். நீண்ட நேரமாகியும் குழந்தையை காணாததால், யாரேனும் திருடி விட்டார்களா என்று அச்சமடைந்தனர்.

இதையும் படிங்க | நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ.. வீடியோவுக்கு போஸ் கொடுத்து மரத்தில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த சிறுத்தை..!

இந்த நிலையில், குளியலறையின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து உள்ளே சென்றனர். அங்கு அந்த குழந்தை தலைகீழாக வாளிக்குள் கிடந்துள்ளார்.

குழந்தையை தூக்கி பார்த்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


First published:

Tags: Death, Local News, Ooty