முகப்பு /செய்தி /நீலகிரி / செல்போனில் குவிந்து கிடந்த இளம்பெண்களின் ஆபாச போட்டோ.. நீலகிரியில் சிக்கிய இளைஞர்

செல்போனில் குவிந்து கிடந்த இளம்பெண்களின் ஆபாச போட்டோ.. நீலகிரியில் சிக்கிய இளைஞர்

கைதான ஜெசிலி

கைதான ஜெசிலி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இளம் பெண்களின் புகைப்படக்களின் ஆபாசமாக மார்பிங் செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்ட வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தர்மகிரி பகுதியை சேர்ந்த ஜெசிலி (வயது 34) கேரளாவில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறை நாளில் ஊருக்கு வரும் ஜெசிலி சமூகவலைத்தளத்தில் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராகில் பெண்களுடன் நட்புறவாக பேசி பழகும் ஜெசிலி அவர்களின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து தனது நண்பர்களுக்கு மெசேஞ்சரில் அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும் அப்பகுதியை சேர்ந்த சில பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த படங்களை தனது செல்போனில் ஸ்டோர் செய்து வைத்துள்ளார். ஜெசிலியின் மோசமாக இந்த செயலை அவரது நண்பர் தட்டிக்கேட்டுள்ளார். ஏன் இப்படி செய்கிறாய் எனக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவேன் என நண்பனை மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நபர் சம்பவம் தொடர்பாக ஊட்டி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இளம்பெண்களின் ஆபாச புகைப்படங்கள் செல்போனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெற்ற தாயின் படத்தையே ஆபாசமாக சித்திரித்து நண்பர்களுக்கு அனுப்பியதை கேட்டு போலீஸாரே அதிர்ச்சியடைந்தனர்.

Also Read: வயிற்று வலியால் துடித்த பெண்.. ஸ்கேன் செய்துபார்த்து அதிர்ந்த மருத்துவர்கள் - ஆந்திராவில் அதிர்ச்சி

ஜெசிலி-க்கு 5 வருடத்துக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இவரது நடவடிக்கையின் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 506(1) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஜெசிலியை சைபர் கிரைம் போலீசார்  கைது  செய்தனர். பின்னர் அவரை ஊட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: ஐய்யாசாமி ( நீலகிரி)

First published:

Tags: Crime News, Local News, Photos, Tamil News