Home /News /nilgiris /

நீலகிரியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை

கனமழை

Nilgiris Rain: கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர், பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் SP அம்ரித்  உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர், பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக அடுத்த 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பா் மாதம் வரை தென்மேற்குப் பருவ மழை பெய்யும். இந்த வருடம் தென்மேற்குப் பருவ மழை சற்று தாமதமாகத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நீலகிரியின் பல பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது.

    அவலாஞ்சி, மேல் பவானி, பந்தலூா், சேரங்கோடு, கல்லட்டி , பாடந்தொறை , நடுவட்டம் , செருமுள்ளி, கூடலூா் , மேல் கூடலூா், தேவாலா , ஓவேலி, எமரால்டு , கிளன்மாா்கன், உதகை, மசினகுடி, குந்தா, கோத்தகிரி, குன்னூா், உலிக்கல், கல்லட்டி , கேத்தி, பாலகொலா, எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது.

    இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர், பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் SP அம்ரித்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதையும் படிக்க: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்... விழாக்கோலம் பூண்ட திருச்சி

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரச்சாவடி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது
    Published by:Murugesh M
    First published:

    Tags: Heavy rain, Nilgiris, School Holiday

    அடுத்த செய்தி