முகப்பு /செய்தி /நீலகிரி / குடும்பத் தகராறில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - கூடலூரில் அதிர்ச்சி சம்பவம்!

குடும்பத் தகராறில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - கூடலூரில் அதிர்ச்சி சம்பவம்!

தற்கொலை செய்து கொண்ட நபர்

தற்கொலை செய்து கொண்ட நபர்

Gudalur Suicide | கூடலூர் அருகே நேற்றிரவு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty) | Gudalur

கூடலூர் அருகே நேற்றிரவு தன்னை தானே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை அஞ்சுகுன்னு கிராமத்தை சேர்ந்த கண்ணதாசனுக்கும் (45) சாரதா என்ற பெண்ணுக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு 12 மணியளவில் கண்ணதாசன் நாட்டுத்துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், கண்ணதாசன் மற்றும் அவரது மனைவி சாரதா இடையே கடந்த இரண்டு நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்ததாகவும், நேற்று இரவு கண்ணதாசன் அளவு கடந்த போதையில் தள்ளாடிய நிலையில் வீட்டுக்கு சென்றதாகவும் அப்போது நாட்டு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலையா கொலையா என விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

செய்தியாளர்: ஐயாசாமி, நீலகிரி.

First published:

Tags: Gudalur, Gun shot, Local News, Nilgiris, Suicide