Home /News /nilgiris /

கஞ்சா வியாபாரியுடன் இணைந்து விற்பனை- காவலர்கள் மீது வழக்குப்பதிவு.. ஒருவர் கைது

கஞ்சா வியாபாரியுடன் இணைந்து விற்பனை- காவலர்கள் மீது வழக்குப்பதிவு.. ஒருவர் கைது

கஞ்சா விற்பனை- போலீஸ் மீது வழக்குப்பதிவு

கஞ்சா விற்பனை- போலீஸ் மீது வழக்குப்பதிவு

நீலகிரியில் கஞ்சா வியாபாரிகளிடம் தொடர்பு கொண்டு கஞ்சா விற்பனை செய்த மூன்று காவலர்கள் மீது வழக்கு பதிவு, நான்கு பேரில் மூன்று பேர் பணியிடை நீக்கம். ஒருவர் தப்பி ஓட்டம், ஒரு காவலர்  கோவை மத்திய சிறையில் அடைப்பு. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் இச?

மேலும் படிக்கவும் ...
    நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரியுடன் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நான்கு காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசார் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.  இது குறித்து எஸ்.பி. தலைமையில் கடந்த ஒரு வாரமாக விசாரணை மேற்கொண்டனர்.
    விசாரணையின் அடிப்படையில் , புளியம்பாறை பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கைது செய்யப்பட்டார்.

    வர் அளித்த தகவலில், எருமாடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய அமரன், சேரம்பாடி காவல் நிலைய ஆய்வாளரின் கார் ஓட்டுநர் உடையார், தேனியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் கணேசன் ஆகியோர் ஒரே அறையில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதில்  கணேசனுக்கும், கஞ்சா மொத்த வியாபாரிகளுக்கும் தொடர்பு இருந்துள்ளது.

    கேரளா, கர்நாடக மாநிலங்களிலிருந்து மொத்தமாக, வாங்கி வரும் கஞ்சா விற்பனையர்களுடன் கை கோர்த்த கணேசன் கஞ்சாவை கூடலூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கு சப்ளை செய்துள்ளார். போலீஸ் அமரன் தபால் கொடுக்கவும், எஸ்.பி. அலுவலகம் செல்லும்போதும், போலீஸ் போர்வையில் கஞ்சாவை எடுத்து சென்று, கணேசன் கூறும் நபர்களிடம் கொடுத்து வந்துள்ளார்.

    இதையும் படிங்க: தடையில்லா சான்றுக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய உதவி செயற்பொறியாளர்

    இது குறித்த தகவலை அறிந்தபோதிலும், சேரம்பாடி போலீஸ்  இன்ஸ்பெக்டர் டிரைவர் உடையார், ஊட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய விவேக் ஆகியோர் தகவலை தெரிவிக்காமல் இருந்துள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் கணேசன், அமரன், உடையார், விவேக் நால்வர்  மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கணேசன் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில்,அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். மற்ற மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  இதில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அமரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Ganja, Police, Police arrested

    அடுத்த செய்தி