Home /News /nilgiris /

தந்தை மகனை அரிவாளால் வெட்டி ரூ.52 லட்சம் கொள்ளை.. அதிகாலையில் அரங்கேறிய பயங்கரம்!

தந்தை மகனை அரிவாளால் வெட்டி ரூ.52 லட்சம் கொள்ளை.. அதிகாலையில் அரங்கேறிய பயங்கரம்!

உதகையில் மார்க்கெட் பகுதியில் தந்தை மகன் இருவரையும் அரிவாளால் வெட்டி ரூ.52 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
உதகையில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டி விட்டு பணம் கொள்ளையடிக்க முயற்சித்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் ( 57) மற்றும் இவரது மகன் யுவராஜ் ( 25) ஆகியோர் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை உதகையில் இருந்து திருச்சி பகுதிக்கு காய்கறிகளை அனுப்பும் வியாபாரிகளுக்கு பணம் கொடுப்பதற்காக உதகை வருவது வழக்கம். அந்த வகையில், உதகையில் உள்ள வியாபாரிகளுக்கு வழக்கம் போல் பணம் கொடுப்பதற்காக தந்தை, மகன் ஆகிய இருவரும் இன்று வந்துள்ளனர்.

அதிகாலை உதகை காபி ஹவுஸ் சந்திப்பிலிருந்து மார்க்கெட் பகுதிக்கு பணத்துடன் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது இவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் திடீரென அரிவாளால் இருவரையும் வெட்டி விட்டு, அவர்கள் கொண்டு வந்த ரூ.52 லட்சத்தை கொள்ளையடித்து காரில் தப்பி சென்றனர்.

ALSO READ | 17 வயது சிறுமிக்கு ஆட்டோவில் பிறந்த குழந்தை.. கர்ப்பமாக்கிய இளைஞர் தற்கொலை முயற்சி

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலில் காயங்களுடன் இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனிப்படை அமைத்து சோதனை செய்து வந்த போலீசார் காட்டேரி பகுதியில் மர்மகும்பலை சுற்றி வளைத்தனர்.  தொடர்ந்து இருவரை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Anupriyam K
First published:

Tags: Nilgiris, Theft

அடுத்த செய்தி