ஹோம் /நியூஸ் /நீலகிரி /

மசினக்குடியில் மல்லுக்கட்டிய காட்டுயானைகள்.. பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்.. நீலகிரியில் பரபரப்பு

மசினக்குடியில் மல்லுக்கட்டிய காட்டுயானைகள்.. பீதியில் உறைந்த வாகன ஓட்டிகள்.. நீலகிரியில் பரபரப்பு

சண்டையிட முயன்ற யானைகள்

சண்டையிட முயன்ற யானைகள்

யானைகள் வனப்பகுதிக்கு செல்லும் வரை காத்திருந்து வாகன ஓட்டிகள் சாலையை கடந்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நீலகிரி மாவட்டம் மசனகுடி செல்லும் சாலையில் சண்டையிட முற்பட்ட காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

  முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியிலிருந்து மசனகுடி செல்லும் சாலையில் இன்று காலை இரண்டு காட்டு யானைகள் சாலையில் உலா வந்தன. இரு காட்டு யானைகளும் சண்டையிட ஆக்ரோஷமாக இருந்தன இதனால் மசனகுடிக்கு செல்லும் வாகனங்களும் மசனகுடியில் இருந்து உதகை நோக்கி வரும் வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்பட்டன.

  நீயா நானா என்று தோனியில் இரு யானைகள் நடுரோட்டில் சண்டையிட தயாரானதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

  சுமார் அரை மணி நேரம் சாலையில் இருந்த காட்டு யானைகளை வனத்துறையினர் சத்தம் போட்டு விரட்டினர்.

  இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் நிம்மதியாக சாலையை கடந்தனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  செய்தியாளர்: ஐயாசாமி, நீலகிரி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Elephant, Nilgiris