நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம், நீலகிரி ஆட்சியரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து எஸ்.பி., ஆசிஷ் ராவத்தை கலெக்டர் தொடர்பு கொண்டு இதுகுறித்து புகார் அளித்தார். உடனடியாக மாவட்ட முழுவதும் போலீஸ் உஷார்படுத்தப்பட்டனர். நேற்றிரவு, 11 மணி முதல் விடிய விடிய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஊட்டி டவுன் டி.எஸ்.பி, மகேஸ்வரன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். நகரில் காபி ஹவுஸ், சேரிங் கிராஸ், கல்லட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட சாலைகளில் வாகன சோதனை நடந்தது. இதேபோல், மாவட்டத்தில் அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னரே, மாவட்டத்திற்குள் வாகனங்களை அனுமதித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாகன சோதனை
ஊட்டி நகரில் சுற்றி திரிந்த வெளியூர்களிலிருந்து வந்த நபர்களிடம் எதற்காக வந்துள்ளீர்கள் என்று விசாரணை நடத்தினர். ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியாக உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தினர். பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்பநாய் மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
Must Read : 108 ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தைகள் - குவியும் பாராட்டு!
செல்போன் மிரட்டல் விடுத்த எண்ணை கொண்டு அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக மிரட்டல் விடுத்தார் என்று வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - ஐயாசாமி.
உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.