முகப்பு /செய்தி /நீலகிரி / சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரனுக்கு ரூ.10000 அபராதம் - நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரனுக்கு ரூ.10000 அபராதம் - நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் ராமசந்திரன்

அமைச்சர் ராமசந்திரன்

அப்போதைய கண்டோண்மெண்ட் தலைவரும் தற்போதைய ஒபிஎஸ் அணி மாவட்ட செயலாளருமான பாரதியார் மற்றும் அப்போதைய திமுக கவுன்சிலர் வினோத் ஆகியோருக்கும் அபராதம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கடந்த 2013-ஆம் ஆண்டு குன்னூர் வெலிங்டன் கண்டோண்மெண்ட் போர்டு துணை தலைவர் தேர்தலில் அதிமுக - திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அதிமுகவினர் 10 பேர் கண்டோண்மெண்ட் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

அப்போது துணை தலைவர் தேர்தலில் வாக்களிக்க 4 கவுன்சிலர்களை அப்போதைய குன்னூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கா.ராமசந்திரன் மற்றும் குன்னூர் நகர்மன்ற உறுப்பினர் ராமசாமி ஆகியோர் ஆகியோர் அழைத்து சென்ற போது மோதல் ஏற்பட்டது. அதில் அதிமுகவை சார்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டதுடன் கா.ராமசந்திரன் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யபட்டது.

இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்கு அமைச்சர் ராமச்சந்திரன் ஆஜராகவில்லை. இதனால் அமைச்சர் கா.ராமசந்திரனுக்கு 10 ஆயிரம் ரூபாயை குன்னூர் அருகே எடபள்ளியில் உள்ள சித்தகிரி சாய் தர்ம ஸ்தல அறக்கட்டளைக்கு வழங்க வேண்டும் எனவும் அடுத்த வழக்கு விசாரணைக்கு கட்டாயமாக ஆஜராகுமாறும் மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டுள்ளார்.

அதே போல அப்போதைய கண்டோண்மெண்ட் தலைவரும் தற்போதைய ஒபிஎஸ் அணி மாவட்ட செயலாளருமான பாரதியார் மற்றும் அப்போதைய திமுக கவுன்சிலர் வினோத் ஆகியோர் நேற்று ஆஜராகாததால் அவர்களும் தலா 10 ஆயிரம் ரூபாயை அந்த அறக்கட்டளைக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: Minister