முகப்பு /செய்தி /நீலகிரி / கனமழை எச்சரிக்கை: நீலகிரிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர்...

கனமழை எச்சரிக்கை: நீலகிரிக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர்...

தேசிய பேரிடர் மீட்பு படையினர்

தேசிய பேரிடர் மீட்பு படையினர்

கனமழை எச்சரிக்கையையடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 44 பேர் இன்று உதகை வந்தடைந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று கனமழை , நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

இதையடுத்து மாவட்டத்தில் கூடலூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்பு துறை சார்பில் மூன்று சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் பேரிடர் மீட்புக் குழுவினர் உதகையிலுள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்.

இதில் நாற்பத்தி நான்கு பேர் இரண்டு குழுக்களாக தலா ஒரு குழுவிற்கு 22 பேர் வீதம் கூடலூர் , குந்தா ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கூறுகையில், " மழை பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளுக்கு விரைவாக சென்று மரங்கள் மண்சரிவுகள் ஏற்பட்டால் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்வோம்” என்றனர்.

Also see...இபிஎஸ் தொடர்ந்த வழக்கு: அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ்

மேலும் கன மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் அந்தந்த பகுதிகளில் பணியில் ஈடுபட உள்ள பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

செய்தியாளர்: ஐயாசாமி, நீலகிரி

First published:

Tags: Heavy Rainfall, National Disaster Management, Nilgiris