Home /News /nilgiris /

கும்கி யானைகளுக்கு பணி ஓய்வு..!

கும்கி யானைகளுக்கு பணி ஓய்வு..!

முதுமலை, மூர்த்தி என்ற இரு யானைகள்

முதுமலை, மூர்த்தி என்ற இரு யானைகள்

Udhagamandalam | யானைகள் புடைசூழ பழங்குடியினரின் பாரம்பரிய இசை முழங்க, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில் முதுமலை, மூர்த்தி என்ற இரு யானைகளுக்கு பிரிவு உபசார ஓய்வு வழங்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India
    தமிழகத்தில் உள்ள யானைகள் முகாமில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் புகழ்பெற்றதாகும்.
    இங்கு 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு யானைகளுக்கும் ஒவ்வொரு சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன.
     யானைகள் முகாமில் வளர்க்கப்படும் யானைகளுக்கு வயது முதிர்வு காரணமாக பணி ஓய்வு வழங்கப்பட்டும் வருகிறது.

    யானைகள் முகாமில் உள்ள ஒவ்வொரு யானைகளும் சிறப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக காடுகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை விரட்ட கும்கியாகவும் அதேபோல் வனப் பகுதியில் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    நாள்தோறும் இங்கு உள்ள கும்கி யானைகளுக்கு வனத்துறை சார்பில் காலை மாலை என இரு வேளையும் உணவு மாடத்தில் சத்துள்ள உணவு வழங்கப்படுகிறது. இதனிடையே இந்த யானைகள் முகாமில் இருக்கும் 58 வயது முடிந்த மூர்த்தி, முதுமலை ஆகிய இரு யானைகளுக்கு பணி ஓய்வு வழங்கும் நிகழ்ச்சி முதுமலை யானைகள் முகாமில் நடைபெற்றது.

    இதில் குறிப்பாக மூர்த்தி தமிழக கேரள எல்லையில் 22 பேரை கொன்றது. அதனால் இந்த யானையை சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கேரள வனத்துறையினருக்கு சிக்காமல் தப்பித்து தமிழக வனத்துறையினர் தீவிர முயற்சிக்குப் பின் கூடலூர் புளியம்பாறையில் 1998 ஆம் ஆண்டு பிடிபட்டது.

    அப்போதிருந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இந்த மூர்த்தி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. 12 ஆண்டுகள் மூர்த்தி யானையை கவனித்துக் கொள்ளும் கிருமாறன் தெரிவிக்கையில், “ 22 பேரை கொன்ற மூர்த்தி யானை 12 ஆண்டுகளாக தான் கவனித்து வருவதாகவும் குழந்தை போல் தான் சொல்வதைக் கேட்டு செயல்களை செய்து வருகிறது. எங்கள் குடும்பத்தில் ஒருவரை போல் மூர்த்தி யானையை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்றார்.

    மேலும்” ஒவ்வொரு நாளும் தன்னை காணவில்லை என்றால் ஏக்கத்துடன் இருக்கும் எனவும் ஆற்றங்கரைக்குச் செல்லும் பொழுதும் உணவு மாடத்திற்கு வரும் பொழுதும் தன்னை பாசமாக அழைக்கும் தற்போது மூர்த்தி யானைக்கு பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.  இருந்தாலும் அதை மேலும் நன்றாக பார்த்து கவனித்துக் கொள்ளும் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும். அதே போல் எங்களுடனே யானை பயணிக்கும்”  என தெரிவித்தார்.

    இதேபோல் முதுமலை வனப்பகுதியில் 1967ஆம் ஆண்டு பிடிபட்ட முதுமலை யானை இந்த யானைகள் முகாமிலேயே வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காட்டு யானைகளை விரட்டவும் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. குறிப்பாக முதுமலை யானையின் மாவுத் மாறன் தெரிவிக்கையில்,” சிறு வயதில் பிடிபட்ட முதுமலை யானை சொல் பேச்சு கேட்கும் குழந்தை போல் தங்களுடன் பழகியதாகவும் காடுகளுக்கு அழைத்துச் செல்லும் பொழுது எத்தனையோ முறை காட்டு யானைகளிடம் இருந்து தன்னை காப்பாற்றி உள்ளதாகவும் புலி சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளிடமிருந்தும் தன்னை பத்திரமாக மீட்டு வந்துள்ளதாகவும்”  பெருமையுடன் கூறினார்.

    முதுமலை யானை எங்கள் குடும்பத்தில் உள்ள பேரன், பேத்திகள் முதல் அனைவரும் கண்டால் சந்தோஷம் பொங்கி செல்லமாக விளையாடும். எத்தனையோ இன்னல்களில் தன்னை காப்பாற்றிய முதுமலை யானைக்கு  பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. முதுமலை யானைகள் முகாமில் முதுமலை யானையின் பங்கு சொல்லில் அடங்காதவை என பெருமையாக தெரிவித்தார்.

    பணி ஓய்வு பெறும் முதுமலை, மூர்த்தி ஆகிய இரு யானைகளுக்கும் முதுமலை புலிகள் காப்பக கல இயக்குனர் வெங்கடேஷ் சான்றுகளை வழங்கி கௌரவித்தார். பின்பு மற்ற யானைகள் புடை சூழ தும்பிக்கையை தூக்கிப் பிளிற பாரம்பரிய பழங்குடியினரின் இசை யோடு இரு யானைகளும் அலங்கரிக்கப்பட்டு ஜோடித்து முதுமலை புலிகள் காப்பக யானைகள் மூகாமில் இருந்து விடை பெற்றது.

    Also see...  செப்., 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் 5ம் தேதி 

    கால்களில் சங்கிலிகளோடு சுற்றி வந்த மூர்த்தி, முதுமலை ஆகிய  இரு யானைகள் இனி முதுமலை யானைகள் முகாமில் ராஜாக்களாக சுதந்திரமாக வலம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: ஐயாசாமி, நீலகிரி
    Published by:Vaijayanthi S
    First published:

    அடுத்த செய்தி