Home /News /nilgiris /

வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் நடந்த விபரீதம் - தாயும் சிசுவும் உயிரிழந்த துயர சம்பவம்

வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் நடந்த விபரீதம் - தாயும் சிசுவும் உயிரிழந்த துயர சம்பவம்

நீலகிரி

நீலகிரி

Child Delivery at home : குழந்தை பிறந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரத்தப்போக்கு காரணமாக தாயார் பிரியா உயிருக்கு போராடி வந்த நிலையில் அவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாத காரணத்தால் அவரும் உயிரிழந்து இருக்கிறார். இந்த சம்பவம் நீலகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Gudalur, India
    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாயும், குழந்தையும் உயிரிழந்துள்ளனர். குழந்தையை யாருக்கும் தெரியாமல் பெண்ணின் பெற்றோர்கள் புதைத்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நிமினிவயல் பகுதியை சேர்ந்தவர் தேவன். இவரது 21 வயது மகள் பிரியா என்பவர் அப்பகுதியில் உள்ள ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். இருவருக்கும் திருமணமாகாத நிலையில் பிரியா ஏழு மாத கர்ப்பினியாக இருந்திருக்கிறார். கடந்த 18 ஆம் தேதி அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் அவரது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர். அப்போது பிரியா ஏழு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரியாவை பெற்றோர்கள் அழைத்து சென்ற நிலையில், வயிற்று வலி அதிகமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக ஊட்டிக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    ஆனால் மருத்துவர்கள் அறிவுறுத்தியது போல ஊட்டி அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் பெற்றோர்கள் பிரியாவை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அன்று இரவு அவருக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் வீட்டில் இருப்பவர்களே பிரசவம் பார்த்திருக்கிறார்கள்.

    பிரியாவிற்கு குழந்தை பிறந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரியாவின் தந்தை, குழந்தையை யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் புதைத்து இருக்கிறார். அப்போது ரத்தப்போக்கு காரணமாக பிரியா உயிருக்கு போராடி வந்த நிலையில் அவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாத காரணத்தால் அவரும் உயிரிழந்து இருக்கிறார்.

    இது குறித்து ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    உயிரிழந்த பிரியாவின் உடல் ஊட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. வருவாய்த் துறையினர் முன்னிலையில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டில் பிரசவம் பார்த்ததால் நடைபெற்ற இந்த துயர சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Gudalur

    அடுத்த செய்தி