தெற்கு சூடான் நாட்டிற்கான ஜ.நா.சபையின் படை தளபதியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அரிய வாய்ப்பு, இந்திய நாட்டிற்கும் எனக்கும் கிடைத்த ஒரு நல்வாய்ப்பாக உள்ளது என குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் மோகன் சுப்ரமணியன் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர், தெற்கு சூடான் நாட்டிற்கான அமைதியை நிலை நாட்டுவதற்காக புதிய படை தளபதியாக இந்தியாவின், தமிழகத்தை சேர்ந்த மோகன் சுப்ரமணியத்தை நியமித்துள்ளார். 36 ஆண்டுகள் ராணுவத்தில் பணி அனுபவம் பெற்ற மோகன், அவர்களின் அயராத உழைப்பு, திறமையான தலைமை பண்பு ஆகியவை காரணமாக இந்த பொறுப்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தற்போது மோகன் சுப்ரமணியம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியின் கமாண்டன்ட் ஆக உள்ளார். இந்நிலையில், அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஐ.நா சபையில் அமைதி காத்தல் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. 1948 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அதிகளவிலான பங்களிப்பு அளித்ததில் இந்தியாவும் ஒன்று.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி
பல ஆண்டுகளாக ராணுவ வீரர்கள், காவல்துறையினர், விமானபடையினர் அதிகமாக உள்ள நாடாக இந்தியா உள்ளது. ஜ.நா. சபையின் அமைதி பணிக்காக, நம் எல்லையை தாண்டி, நமது படையினர் அமைதிக்காக160 பேர் மரணமடைந்துள்ளனர். அமைதிக்காக இவ்வளவு வீரர்கள் உயிர்நீத்தது வேறு எந்த நாடுகளிலும் இல்லை.
Must Read : வடிவேலு பட பாணியில் டெஸ்ட் டிரைவ் என கூறி பைக் திருட்டு... முதியவருக்கு கிடைத்த மாலை மரியாதை
இது போன்ற இடத்தில் தலைமை ஏற்க இந்தியா மற்றும் ஜ.நா. தேர்வு செய்து பொறுப்பு ஏற்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது நமது நாட்டிக்கும், எனக்கும் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. உலக அமைதிக்காக இந்தியா செய்கின்ற ஒரு முக்கியமான இந்த பணியில் எனக்கு கிடைத்துள்து. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், விரைவில் இந்த புதிய பதவிக்கு இவர் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர் - ஐயாசாமி.
உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.