Home /News /nilgiris /

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட்... தயார் நிலையில் மீட்பு குழுவினர்...

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலர்ட்... தயார் நிலையில் மீட்பு குழுவினர்...

நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு - தயாராக இருக்கும் மீட்பு குழு

நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு - தயாராக இருக்கும் மீட்பு குழு

Nilgiri Red alert | நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இதையடுத்து மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்: ஐயாசாமி, ஊட்டி

மேலும் படிக்கவும் ...
    நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில்  மீட்புப் பணிகளுக்கான உபகரணங்கள் சரிபார்த்து தயார்படுத்தும் ஒத்திகை உதகையில் உள்ள தலைமை தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில் நடைபெற்றது .

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழையும் நாளை மிக கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ஆரஞ்சு அலார்ட் நாளை ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தயாராக இருக்கும் மீட்பு குழுவினர்


    இதனால் மாவட்டம் முழுவதும் தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மீட்புப் பணிகள் மேற்கொள்வதற்காக உபகரணங்கள் சரிபார்ப்பு மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் ஒத்திகை உதகையில் உள்ள தலைமை தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில் நடந்தது.

    Also see...நிரம்பும் வைகை அணை.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    இதையடுத்து தீயணைப்பு துறை நிலை அலுவலர் பிரேமானந்தன் கூறுகையில், நீலகிரிக்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை, மிக கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட நிர்வாகம்  அறிவுறுத்தலின்படி, மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் சரிபார்க்கும் ஒத்திகை நடைபெற்றது என்றார்.

    மேலும் மாவட்டத்தில் கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை துரிதமாக சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மரங்களுக்கு கீழ், ஆறுகள் மற்றும் தடுப்புச் சுவரின் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Heavy Rainfall, Meteorological Center, Nilgiris

    அடுத்த செய்தி