Home /News /nilgiris /

மசினகுடிக்கு வெள்ளப் பெருக்கால் போக்குவரத்து துண்டிப்பு... அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு... மக்கள் வேதனை...

மசினகுடிக்கு வெள்ளப் பெருக்கால் போக்குவரத்து துண்டிப்பு... அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு... மக்கள் வேதனை...

வெள்ளத்தில் மூழ்கிய தரைப் பாலம்

வெள்ளத்தில் மூழ்கிய தரைப் பாலம்

Udhagamandalam | மாயார் ஆற்றில் தொடரும் வெள்ள பெருக்கால் போக்குவரத்து துண்டிக்கபட்டுள்ள மசினகுடி பகுதியில் உணவு பொருட்கள், காய்கறி, பால், கேஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதோடு கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்த கன மழையால் அனைத்து அணைகள் நிரம்பியதுடன் ஆறுகளிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூடலூர் பகுதியில் பெய்த மழையாலும், பைக்காரா மற்றும் கிளண்மார்கன் அணைகள் திறக்கப்பட்டதாலும் மாயார் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் மசினகுடி - கூடலூர் நெடுஞ்சாலையில் தெப்பக்காடு பகுதியில் உள்ள தரை பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

    இதனையடுத்து கூடலூர் - மசினகுடி சாலை மூடப்பட்டு கடந்த 4 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கபட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடலூர் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதனிடையே கூடலூர் மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து மசினகுடிக்கு தேவையான உணவு பொருட்கள், காய்கறி, பால், கேஸ், டீசல் பெட்ரோல் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களை கொண்டு வர முடியாததால் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    Also see... ஆடிவெள்ளி: கீழாத்தூர் நாடியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    ஓராண்டுக்கு முன்பு தெப்பக்காடு யானை முகாம் அருகே இருந்த பழமையான பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டுவதாக கூறி இடித்த நெடுஞ்சாலை துறை இதுவரை கட்டாமல் காலம் தாழ்த்தி வருவதால் மசினகுடி பகுதிக்கு இது போன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் பொதுமக்கள் தமிழக அரசு போர்கால அடிப்படையில் புதிய பாலம் கட்ட கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: ஐயாசாமி, உதகை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Heavy Rainfall, Masinagudi, Nilgiris

    அடுத்த செய்தி