Home /News /nilgiris /

சாலையில் ஹாயாக உலா வந்த சிறுத்தை.. பயத்துடன் படம் பிடித்த வாகன ஓட்டிகள்..

சாலையில் ஹாயாக உலா வந்த சிறுத்தை.. பயத்துடன் படம் பிடித்த வாகன ஓட்டிகள்..

தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை

தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை

Ooty | உதகை மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை....அதிகாலை சாலை ஓரத்தில் உலா வந்த சிறுத்தையை அச்சத்துடன் படம்பிடித்த வாகன ஓட்டிகள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mettupalayam, India
    அதிகாலை சாலை ஓரத்தில் உலா வந்த சிறுத்தையை அச்சத்துடன் படம்பிடித்த வாகன ஓட்டிகள். சாலையை கடக்க முடியாமல் சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    உதகை மைசூர் தேசிய நெடுஞ்சாலை வனப்பகுதியை கொண்ட சாலையாக உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி சிறுத்தைகள் , காட்டு மாடுகள், சாலையோரங்களில் உலாவரும். அதிலும் நீலகிரி மலைப்பகுதிகளில் இதுப்போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரடி ஒன்று கோயிலுக்குள் நுழைந்தது மற்றும் யானை ஒன்று தனது குட்டியுடன் சாலைப் பகுதியில் சுற்றிதிரிந்தது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தன.

    இந்நிலையில் இன்று அதிகாலை பைக்காரா பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சிறுத்தை சாலையை கடக்க முயற்சித்தது. அப்போது வாகனங்கள் வந்ததாலும் சாலை ஓரத்தில் மனித நடமாட்டம் இருந்ததாலும் சாலை ஒரத்திலேயே நின்றது. பின் வாகன ஓட்டிகள் அதனை வீடியோ எடுத்த வண்ணமும் அதனை கவனித்த வண்ணமும் இருந்தனர்.

    Read More : நீங்க கோபப்பட்டா பேசமாட்டான்.. உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் ரோபோ..! - சென்னை மாணவனின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு


    சிறுது நேரம் சாலையோரத்தில் நின்ற சிறுத்தை சாலையை கடக்க முடியாமல் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. வீடியோ எடுத்த நபர் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட அது இப்போது வைரலாகி வருகிறது.

    செய்தியாளர்: அய்யாசாமி
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Ooty, Viral Video

    அடுத்த செய்தி