Home /News /nilgiris /

உதகையில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு... காய்கறிகளை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் வேதனை

உதகையில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு... காய்கறிகளை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் வேதனை

உதகை - மண் சரிவு

உதகை - மண் சரிவு

Udhagamandalam | உதகை கல்லக்கொரை பகுதியில் கனமழை காரணமாக சாலை சேதமடைந்துள்ளதால் காய்கறிகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    உதகையில் பெய்து வரும் கனமழை காரணமாக கல்லக்கொரை எனும் பகுதியில் சாலையோடு விழுந்த மண் சரிவால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மலை காய்கறிகள் வீணாகி உள்ளன. எனவே அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    உதகை கல்லக்கொரை கிராமத்தில் அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக விவசாய நிலத்தை ஒட்டி இருந்த சாலை சரிந்து விழுந்தது. இதனால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய  போக்குவரத்து தடைபட்டுள்ளது.

    சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மண்சரிவு ஏற்பட்ட காரணத்தால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த மழை காய்கறிகள் சேதமாகியுள்ளன.

    மேலும் இந்த பகுதியில் சாலையை ஒட்டி ஆபத்தான முறையில் விழும் நிலையில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட மரங்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அறுத்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    Also see... கோவையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எரிவாயு குழாய்...

    நாள்தோறும் இங்கிருந்து மேட்டுப்பாளையத்துக்கு காய்கறி எடுத்துச் செல்லும் வாகனங்கள் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சாலையோடு மண் சரிவு ஏற்பட்டுள்ள இந்த பகுதியை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் எனவும் இந்த சாலை சீரமைக்க பட்டால் மட்டுமே இந்த பகுதியில் இருந்து காய்கறிகளை சந்தைப்படுத்துவதற்கு எடுத்துச்செல்ல முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர்: ஐயாசாமி, உதகை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Farmers, Heavy rain, Ooty

    அடுத்த செய்தி