ஹோம் /நியூஸ் /நீலகிரி /

நீலகிரி உயிலட்டி நீர்வீழ்ச்சியில் நிலச்சரிவு.. அதிகாரிகள் ஆய்வு!

நீலகிரி உயிலட்டி நீர்வீழ்ச்சியில் நிலச்சரிவு.. அதிகாரிகள் ஆய்வு!

அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை கோவை வட்டம் கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சியில் நேற்று முன்தினம் ஏற்ப்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் மண் மற்றும் ராட்சத பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட பகுதியை நெடுஞ்சாலை துறை கோவை வட்டம் கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது எந்த காரணத்தினால்  நிலச்சரிவு ஏற்பட்டது எனவும், தொடர்ந்து இந்த பகுதியில் மீண்டும் பாதிப்பு ஏற்படுமா என ஆய்வை மேற்க்கொண்டார்.

உயிலட்டி நீர்வீழ்ச்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்க் கொள்ள வேண்டும் எனவும்,எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது.

மலைப்பாதையில் உள்ள சாலையோரத்தில் எவ்வாறு தடுப்புச்சுவர் கட்டுமான பணி மேற்க் கொள்வது என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கூக்கல்தொரை முதல் கோத்தகிரி வரை புதிதாக அமைக்கப்பட்ட சாலையோர தடுப்புசுவர்களையும் அதன் தரம் குறித்தும் ஆய்வு மேற்க் கொண்டார்.இவ்வாய்வின் போது உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன், உதவி பொறியாளர் ரமேஷ், சாலை ஆய்வாளர்கள்  மற்றும் சாலைப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் : அய்யாசாமி - நீலகிரி.

First published:

Tags: Inspection, Local News, Nilgiris