முகப்பு /செய்தி /நீலகிரி / நீலகிரி : முதுமலையில் புலி தாக்கி பெண் உயிரிழப்பு.. அச்சத்தில் உறைந்த மக்கள்

நீலகிரி : முதுமலையில் புலி தாக்கி பெண் உயிரிழப்பு.. அச்சத்தில் உறைந்த மக்கள்

இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது

இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது

Mudumalai Tiger Attack | கடந்த சில நாட்களுக்கு முன்பு தெப்பக்காடு பகுதியில் வேட்டை தடுப்பு காவலர் மாதன் என்பவரை புலி தாக்கியதில் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் புலி தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு வனப்பகுதியை ஒட்டிய யானைப்பாடி கிராமத்தில் உள்ள மாரி(50) என்ற பெண்மணி நேற்று மாலை முதல் வீடு திரும்பததால் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அப்பகுதி முழுவதும் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் மாரியை தேடிப் பார்க்கும் புதரில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறையினர் மாரியின் உடலை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தெப்பக்காடு பகுதியில் வேட்டை தடுப்பு காவலர் மாதன் என்பவரை புலி தாக்கியதில் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது புலி தாக்கி பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பழங்குடியின கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இரண்டு பேரை தாக்கிய புலியை உடனே கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: ஐயாசாமி ( நீலகிரி)

First published:

Tags: Local News, Nilgiris, Tamil News, Tiger