ஹோம் /நியூஸ் /நீலகிரி /

200 அடி பள்ளத்திற்குள் கவிழுந்த சரக்கு லாரி.. சிறு காயங்களுடன் உயிர் தப்பிய ஓட்டுநர், கிளீனர்..!

200 அடி பள்ளத்திற்குள் கவிழுந்த சரக்கு லாரி.. சிறு காயங்களுடன் உயிர் தப்பிய ஓட்டுநர், கிளீனர்..!

சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

Niligiri | நள்ளிரவு பெய்த கன மழை காரணமாக சாலை முழுவதும் கடும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நீலகிரி அருகே நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் மலைப்பாதையில் சென்ற சரக்கு லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை கிராமத்தில் சுகுனி, புர்க்கோலி உள்ளிட்ட இடங்களில் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி  செய்யப்படுகிறது.  இங்கு சாகுபடி செய்யப்படும் இங்கிலீஷ் காய்கறிகள் பெங்களூர் பகுதிக்கு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல் கடந்த இரு தினங்களுக்கு பெங்களூரில் இறக்குமதி செய்த லாரி ஒன்று கோத்தகிரிக்கு திரும்பி கொண்டிருந்தது.

  இந்த லாரியை ஓட்டுனர் சந்தோஷ் மற்றும் கிளீனர் கோகுல்ராஜ் ஆகியோர் லாரியை இயக்கி வந்துள்ளனர். அப்போது உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் மலை பாதையில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக சாலை முழுவதும் கடும் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் இந்த சரக்கு லாரி  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி 200 அடி பள்ளத்தில் தாழ்வான பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  இதையும் படிங்க | காரைக்குடியில் சரக்கு வாகனத்தை வழிமறித்து ரூ.11 லட்சம் கொள்ளை... 3 பேர் கைது...

  விபத்தின் போது லாரி ஓட்டுநர் சந்தோஷ் மற்றும் கிளீனர் கோகுல்ராஜும் லாரியில் இருந்து வெளியே குதித்ததால் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் விபத்தில் காயமடைத்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: ஐயாசாமி, கோத்தகிரி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Accident, Nilgiris, Ooty