மலை மாவட்டமான நீலகிரியில் சுமார் 67% வன பகுதி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கிய உயிர் சூழல் மண்டலமாக விளங்குவதால் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக் பயன்படுத்த தடை, கற்கள் உடைக்க, ஆழ்துளை கிணறு அமைக்க, தொழிற்சாலைகளை திறக்க என பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிலச்சரிவு அதிகமாக ஏற்படுவதால் பாறைகளை உடைக்கவும் மண்ணை வெட்டி எடுத்து அகற்றவும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வீடு கட்ட மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டும். இதனால் நீலகிரி மாவட்டத்தை சார்ந்த சாதாரன மக்கள் வீடு கட்ட அனுமதி கேட்டு சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக காத்து கிடக்கின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக உதகை நகரில் பல்வேறு பகுதிகளில் நீதிமன்ற உத்தரவை மீறி வசதி படைத்தவர்கள் மலைகளை குடைந்து சாலை அமைத்து கட்டுமான பணிகளை செய்து வருவது, ராட்சத பாறைகளை வெடி வைத்து உடைத்து கட்டுமான பணிக்கு பயன்படுத்துவது என பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டு வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
Also see... குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி? - திருமங்கலம் அருகே இரும்புத்துண்டில் மோதியதால் பரபரப்பு..
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாறைகள் மிகவும் பழமையான பாறைகள் என்றும் அவற்றை வெடி வைத்து உடைப்பதாலும் சாலை அமைப்பதாலும் நீலகிரி மாவட்டத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எந்த வித அனுமதியும் இன்றி பாறைகளை உடைப்பவர்கள் மற்றும் சலைகள் அமைத்து அத்துமீறுபவர்களை உதகை நகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை, வனத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
Also see... குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி? - திருமங்கலம் அருகே இரும்புத்துண்டில் மோதியதால் பரபரப்பு..
எனவே மாவட்ட ஆட்சிதலைவர் இதனை தீவிரமாக கண்காணித்து விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீதும் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: ஐயப்பன், உதகை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ooty, Stone carving