Home /News /nilgiris /

தொடர்மழை காரணமாக முதுமலை தெப்பக்காடு பகுதியில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சாலை... பழங்குடியின மக்கள் பாதிப்பு...

தொடர்மழை காரணமாக முதுமலை தெப்பக்காடு பகுதியில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சாலை... பழங்குடியின மக்கள் பாதிப்பு...

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த சாலை

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த சாலை

Nilgiris District : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முதுமலை தெப்பக்காடு பகுதியில் தற்காலிகமாக ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த சாலை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
    நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக கூடலூர் பந்தலூர் உதகை கொண்ட உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள தொரப்பள்ளி தெப்பக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெப்பக்காடு பகுதியில் உள்ள ஆற்றில் பழமையான பாலம் இடிக்கப்பட்டு மாற்றாக தற்காலிகமாக ஆற்றின் குறுக்கே மண் சாலை அமைக்கப்பட்டது.

    இந்த சாலையை அப்பகுதியில் உள்ள பழங்குடியினர் பயன்படுத்தி வந்தனர். தற்போது கூடலூர் பகுதியில் பெய்து வரும் கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக பயன்படுத்தி வந்த மண் சாலை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    இதனால்  பழங்குடியினர் 1 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி வழியே வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியை சுற்றி குடியிருப்புகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Also see... பேருந்தில் தொங்கியபடி மாணவர்கள் அட்டகாசம்.. கோபமடைந்த ஓட்டுனர்..

    செய்தியாளர்: ஐயப்பன், ஊட்டி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Flood, Nilgiris

    அடுத்த செய்தி