ஹோம் /நியூஸ் /நீலகிரி /

ஊட்டியில் மழை, பனிமூட்டம்... வாகன ஓட்டிகள் அவதி..!

ஊட்டியில் மழை, பனிமூட்டம்... வாகன ஓட்டிகள் அவதி..!

ஊட்டியில் மழை, பனிமூட்டம்... வாகன ஓட்டிகள் அவதி..!

ஊட்டியில் மழை, பனிமூட்டம்... வாகன ஓட்டிகள் அவதி..!

Udhagamandalam | உதகையில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. அத்துடன் மழையும் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Udhagamandalam (Ooty), India

  தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் அதன் தாக்கம் நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வருகிறது. குறிப்பாக உதகையில் நேற்று காலை முதல் மாலை வரை நல்ல கால நிலை நிலவி வந்துதது. ஆனால் மாலை 7:00 மணி முதல் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

  அதோடு கடும் பனிமூட்டமும் நிலவியது. இதனால் உதகை நகரம் முழுவதும் பனி சூழ்ந்து காணப்பட்டது. குறிப்பாக  உதகையின் முக்கிய பகுதியான சேரிங்கிராஸ், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, கேசினோ ஜங்ஷன், மத்திய பேருந்து நிலையம், காந்தல், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

  Also see... அடுத்த 3 மணி நேரம் இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்..!

  இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதி அடைந்தனர். பெரும்பாலான வாகன ஓட்டிகள் வாகனங்களை முகப்பு விளக்குகள் எரிய விட்டும் பார்க்கிங் லைட்டை ஆன் செய்தும் சாலையில் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  செய்தியாளர்: ஐய்யாசாமி, ஊட்டி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Heavy rain, Ooty