ஹோம் /நியூஸ் /நீலகிரி /

இதெல்லாம் பஸ்ஸா? ஆளே விழும் அளவுக்கு பெரிய ஓட்டை... அச்சத்துடன் பயணிக்கும் பயணிகள்!

இதெல்லாம் பஸ்ஸா? ஆளே விழும் அளவுக்கு பெரிய ஓட்டை... அச்சத்துடன் பயணிக்கும் பயணிகள்!

ஓட்டையுடன் அரசு பேருந்து

ஓட்டையுடன் அரசு பேருந்து

Nilgiris | நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு செல்லும் அரசு பேருந்தில் ஓட்டை. இதனால் தினமும் மாணவர்களும் பொதுமக்களும் அச்சத்துடன் பயணிக்கின்றனர்

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து பாட்டவயல் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நாள்தோறும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மட்டுமல்லாமல் ஏராளமான பொதுமக்களும் இந்தப் பேருந்தில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பேருந்தின் உள்புறம் ஆளே விழும் அளவிற்கு ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனை பேருந்தில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார்.

சேதமடைந்துள்ள பேருந்தில் பயணிக்கும் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

பேருந்தில் பயணிக்கும் பொழுது கவனக்குறைவால் கால் இடறி விழுந்தால் உயிர் பலி ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also see... சூப்பர் ஸ்டார்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்...

எனவே சேதாரமாகி உள்ள அரசு பேருந்தை சீர் செய்ய வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் புது பேருந்தை இந்த பகுதிக்கு இயக்க வேண்டும் என்றும் பாட்டவயல் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்து சேதமடைந்துள்ள வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது.

செய்தியாளர்: ஐய்யாசாமி, ஊட்டி

First published:

Tags: Bus, Damaged, Gudalur, Nilgiris