மதராசபட்டினம் படத்தில், 'சென்னை காதலனை விட்டு சென்ற இளவரசி முதுமை காலத்தில் மீண்டும் காதலனை தேடி இங்கிலாத்தில் இருந்து இந்தியா வருவார். அப்படியான ஒரு ரியல் சம்பவம் தற்போது நடந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் சோமர்செட் பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ குட்லேண்ட். உலக வங்கியில் முதன்மை விவசாய நிபுணராக உள்ள இவர் தனது நண்பர் கிறிஸ்டோபர் என்பவருடன் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் வருகை தந்தார். முதல் உலக போர் நடந்த போது, அதில் ஆங்கிலேயர் படையில் 2வது லெப்டினென்ட் ஆக பணியாற்றியவர் இவரது தாத்தா ஸ்டேன்லி குட்லேண்ட். இவர் இங்குள்ள ஸ்டேஷன் ஹாஸ்பிடல் என்ற ராணுவ மருத்துவனையில் டைபாய்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனை கடிதங்களாக எழுதி வைத்தது புத்தகமாக இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெலிங்டன் பற்றி மிகவும் சிறப்பாக எழுதி உள்ளதால் தனது தாத்தாவின் நினைவுகள் சுமந்த இடத்தை தானும் பார்வையிட வருகை தந்துள்ளார் அவரது பேரன். வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து சென்ற இடங்கள், அவர் கோல்ப் விளையாடிய ஜிம்கானா மைதானம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ரசித்து புகைப்படம் எடுத்தார்.
இவருக்கு தேசிய ஹாக்கி வீரர் சுரேஷ்குமார் இடங்களை நேரில் அழைத்து சென்று காண்பித்து விளக்கம் அளித்தார். இந்த இடங்களை பார்வையிட்ட ஆண்ட்ரூ குட் லேண்ட் கூறும் போது, " எனது தாத்தா உலக போரின் போது டைபாய்டு பாதித்து இங்கு சிகிச்சை பெற்றதும், வெலிங்டன் பற்றி சிறப்பாக உள்ளது குறித்தும் எழுதி சென்றுள்ளார்.
Also see... பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
இந்த இடங்களை பார்வையிட வேண்டும் என்பதே பல ஆண்டுகள் கனவாக இருந்தது. இந்த இடங்களை பார்வையிட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்குள்ள மக்களும் அன்புள்ளவர்களாக உள்ளனர்”என்றார்.
செய்தியாளர்: ஐய்யாசாமி, ஊட்டி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.