ஹோம் /நியூஸ் /நீலகிரி /

தமிழக அரசின் டேன் டீ நிறுவனத்தை மத்திய அரசிடம் கொடுத்துவிடுங்கள்! - அண்ணாமலை காட்டம்

தமிழக அரசின் டேன் டீ நிறுவனத்தை மத்திய அரசிடம் கொடுத்துவிடுங்கள்! - அண்ணாமலை காட்டம்

அண்ணாமலை

அண்ணாமலை

Nilgiri News : டேன் டீயை தமிழ்நாடு அரசால் நடத்த முடியவில்லை என்றால், மத்திய அரசிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நீலகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் டேன் டீ தேயிலை தோட்டம் உள்ளது. கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் இலங்கையில் இருந்து மீள்குடியேற்றப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் டேன் டீ-ஐ மட்டுமே நம்பி வசித்து வருகின்றன.

  இந்நிலையில், டேன் டீ நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

  இதனால், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி டேன் டீ நிலத்தை ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பாஜக சார்பில் கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய அப்டேட் இதோ

  இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசியதாவது, “டேன் டீ-யில் வேலை என்பது குடியுரிமையுடன் தாயகம் திரும்பிய தழிழர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்நிறுவனத்தால் இழப்பு ஏற்படுவதாக கூறி நிலத்தை ஒப்படைப்பது ஏற்புடையது அல்ல” என்று கூறினார்.

  மேலும், “லட்சம் கோடி கடனில் உள்ள மின்சாரத்துறை வைத்துக்கொள்ளும் தமிழக அரசு, ரூ.218 கோடி கடனில் உள்ள டேன் டீ-ஐ கைவிடுவதா” எனவும் கேள்வி எழுப்பினார். அத்துடன், டேன் டீ தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Annamalai, BJP, Nilgiris