ஹோம் /நியூஸ் /நீலகிரி /

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படை தலைமை தளபதி ஆய்வு

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படை தலைமை தளபதி ஆய்வு

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் வருகை தந்தார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coonoor, India

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த  முப்படைகளின் இடைநிலை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கல்லூரிக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் முப்படை உயர் அதிகாரிகள் வருகை தந்து பயிற்சி அளித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இன்று   நம் நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வந்த முப்படை தளபதி, கல்லூரியில் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து பயிற்சி பெறும் இடைநிலை முப்படை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், கல்லூரியின் நினைவு சின்னத்தை முப்படை தளபதிக்கு நினைவு பரிசாக வழங்கினார்.  ​​வேகமாக மாறிவரும் சூழலில் நிறுவனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாணவர் அலுவலர்களை தயார்படுத்துவதற்காக கல்லூரியின் பல்வேறு முயற்சிகள் குறித்து விளக்கப்பட்டது.

கல்லூரியின் பல்வேறு பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பின் திட்டமிடப்பட்ட மேம்படுத்தல்  குறித்து  தெரிவிக்கப்பட்டது . தொடர்ந்து கோத்தகிரி வழியாக சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு சென்றார். முப்படை தளபதி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

செய்தியாளர் : அய்யாசாமி (நீலகிரி)

First published:

Tags: Coonoor, Local News, Ooty