முகப்பு /செய்தி /நீலகிரி / உதகையில் மழையால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்த வனத்துறை அமைச்சர்..

உதகையில் மழையால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்த வனத்துறை அமைச்சர்..

ஊட்டி - சேதமான இடங்களை ஆய்வு செய்த வனத்துறை அமைச்சர்

ஊட்டி - சேதமான இடங்களை ஆய்வு செய்த வனத்துறை அமைச்சர்

Ooty Rains | உதகை அருகே கன மழையால் சேதமடைந்த பகுதிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆனந் குமார் ஐஏஎஸ் மற்றும்  ஆட்சிதலைவர் அம்ரித் ஆகியோர் கொட்டும் மழையிலும் ஆய்வு.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

 நீலகிரி மாவட்டத்தில்  மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் உதகை, குந்தா தாலுகாக்களில் கன மழை கொட்டி வருகிறது. முத்தொரை, நஞ்சநாடு, இத்தலார் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி வரும் கன மழையால் பாலாடா ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், தங்காடு கிராமத்திலிருந்து துளிதலா மலை  கிராமத்திற்கு  செல்லும் சலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதனையடுத்து பாலாடா பகுதியில் மழையால் ஏற்பட்டுள்ள  சேதங்களை வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆய்வு செய்தார். அப்போது பாலாடா ஆற்றங்கரையில் நடைபெறும் தூர்வாரும் பணிகள், கல்லக்கொரை பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டுள்ள அபாயகரமான மரங்களை வெட்டும் பணிகளை ஆய்வு செய்தார்.

Also see... குற்றால அருவியில் 5-வது நாளாக  குளிக்க தடை

அதனை தொடர்ந்து துளிதலை சாலையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியளர்களிடம் பேசிய கா.ராமசந்திரன், நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வந்தாலும் பெரிய அளவில் சேதம் எதும் இல்லை என்றும் நிவாரண முகாம்கள், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளதாகவும் மீட்பு பணிக்கான எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர்: ஐயாசாமி, ஊட்டி

First published:

Tags: Flood, Forest Department, Nilgiris, Ooty