முகப்பு /செய்தி /நீலகிரி / மூங்கில் காட்டிற்குள் தீயை பற்றவைத்த மர்ம நபர்கள்.. ஊட்டியில் பற்றி எரியும் காட்டு தீ..!

மூங்கில் காட்டிற்குள் தீயை பற்றவைத்த மர்ம நபர்கள்.. ஊட்டியில் பற்றி எரியும் காட்டு தீ..!

ஊட்டியில் பற்றி எரியும் காட்டு தீ

ஊட்டியில் பற்றி எரியும் காட்டு தீ

Nilagiri News : முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வன பகுதியில் பயங்கர காட்டு தீ. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிக்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கி உள்ளது. இதனால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் காட்டு தீ ஏற்பட்டு வருகிறது. நேற்று உதகை அருகே உள்ள பார்சன்வேலி வன பகுதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டு தீ ஏற்பட்டது. இந்நிலையில், இன்று முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வன பகுதியில் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது.

மரவகண்டி அணையின் கரை ஓரத்தில் உள்ள மூங்கில் காட்டிற்குள் மர்ம நபர்கள் தீ பற்ற வைத்த நிலையில் தீயானது மள மள மளவென அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மூங்கில்களுக்கும் பரவி சுமார் 50 அடி உயரத்திற்கு தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.

அந்த பகுதிக்கு விரைந்துள்ள மசினகுடி வனத்துறையினர் காட்டு தீயின் அருகே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இருப்பினும் முடிந்த அளவு தீயை அணைக்க  2 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். ஏற்கனவே அப்பகுதியில் உள்ள மூங்கில்கள் அரசி பூத்து காய்ந்த நிலையில் இருப்பதால் தீ கொளுந்துவிட்டு எரிந்து வருவதால் அப்பகுதி புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது.

செய்தியாளர் : அய்யாசாமி - ஊட்டி

First published:

Tags: Local News, Nilgiris, Ooty