ஹோம் /நியூஸ் /நீலகிரி /

முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை : வனத்துறை எச்சரிக்கை!

முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை : வனத்துறை எச்சரிக்கை!

முதுமலை புலிகள் காப்பகம்

முதுமலை புலிகள் காப்பகம்

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளின் வெடி சத்தத்தால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். இனப்பெருக்கத்திற்காக குடிபெயர்ந்துள்ள பறவைகள் பாதிக்கப்படும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Udhagamandalam (Ooty) |

  நீலகிரி மாவட்டத்தில் வனம் மற்றும் வனவிலங்குகளின் நலன் கருதி அதிக வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என வனத்துறையினர் மூலம் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு தொந்தரவு கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

  பசுமையான தீபாவளியை கொண்டாட நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் மற்றும் நீலகிரி வனக் கோட்டங்களில் பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி அதிக ஒலி (சத்தம் ) தரும் ராக்கெட்,ஆட்டம் பாம் போன்ற பட்டாசுகளை வெடிக்க வேண்டாமென வனத்துறையினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

  அதோடு, வனப்பகுதி அருகே அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்கும் சுற்றுலாப்பயணிகள் இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  சமையலறைக்குள் புகுந்த 10 அடி மலை பாம்பு... ஒரு மணி நேரம் போராடி பிடித்த வனத்துறையினர்!

  நீலகிரி மாவட்டத்தில் வனம் மற்றும் வனவிலங்குகளின் நலன் கருதி அதிக வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என வனத்துறையினர் மூலம் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

  முதுமலை,தெப்பக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள வெளிமண்டல பாதையில் மசினகுடி, மாயார், சிங்கார, ஆனைக்கட்டி கிராமப்புற பகுதிகளை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகிறது. இங்கு புலி, யானை, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளும் பறவைகளும் வாழ்கின்றன.

  மேலும் தற்போது உள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இனப்பெருக்கத்திற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் குடிபெயர்ந்துள்ளன. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளின் வெடி சத்தத்தால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், இனப்பெருக்கத்திற்காக குடிபெயர்ந்துள்ள பறவைகள் பாதிக்கப்படும் என்பதாலும், இயற்கையை காக்கும் வகையில் தீபாவளி நாளன்று பட்டாசுகளை தவிர்த்து பசுமை தீபாவளியை கொண்டாட வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

  மேலும் தனியார் விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் இரவு நேரங்களில் பட்டாசுகள் வெடித்து வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் நோக்கில் ஈடுபட கூடாது எனவும், மீறினால் வனச்சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  செய்தியாளர் : ஐயாசாமி, ஊட்டி

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Deepavali, Diwali, Ooty