Home /News /nilgiris /

என்ன ஒரு ரம்மியமான குரல்..தேயிலை பறித்தபடி பாடல் பாடிய பெண் தொழிலாளி..திறமைக்கு குவியும் பாராட்டு.

என்ன ஒரு ரம்மியமான குரல்..தேயிலை பறித்தபடி பாடல் பாடிய பெண் தொழிலாளி..திறமைக்கு குவியும் பாராட்டு.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video | தேயிலை தோட்ட தொழிலாளியின் பாடலை கேட்ட சுற்றுலா பயணி தன்னுடைய செல்போன் மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தேயிலை தோட்ட தொழிலாளியின் பாடலை கேட்ட சுற்றுலா பயணி தன்னுடைய செல்போன் மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    பெரும்பாலும் வயல்வெளிப் பகுதிகளில் நாற்று நடவு செய்யும் போது வயல்வெளிகளில் கிராமத்து பாடல்கள் பாடி நாற்று நடவு செய்வது  வழக்கமான ஒன்று.இதேபோல் மலைப் பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் அதிக அளவு செய்து வருகின்றனர்.நாள்தோறும் காலை முதல் மாலை வரை இவர்களின் பணி தொடரும்...

    Read More : ஜிம்மில் தலைகீழாக சிக்கிய பெண்... சரியான நேரத்தில் உதவிய ஸ்மார்ட் வாட்ச் - வைரல் வீடியோ

    இந்நிலையில் கோத்தகிரி பகுதியில் உள்ள தேயிலை தோட்ட பெண் தொழிலாளி  ரெஜினா என்பவர் தேயிலை தோட்டத்தில் பணி செய்யும் போது தங்களது வேலை களைப்பு தெரியாமல் இருக்க பாடல் பாடி தேயிலை பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
    1970 ம் ஆண்டு சரோஜா தேவி,சிவாஜி கணேசன்‌ நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் பி.சுசீலா அவர்கள் பாடிய சிட்டு குருவி முத்தம் கொடுத்து பாடலை பாடி தேயிலை தோட்டத்தில் பணியை மேற்கொண்டார்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)





    அப்போது அங்கு வந்த சுற்றுலா பயணி ஒருவர் பின்னணி பாடகி பி.சுசீலா அவர்களின் குரல் போலவே பாடிய இவருடைய பாடலை கேட்டு தனது கைப்பேசி மூலம் தேயிலை பறிக்கும் பெண்மணி பாடிக் கொண்டிருந்த சிட்டு குருவி பாடலை  பதிவு செய்தார் இது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தற்போது வைரலாகி வருகிறது.

    செய்தியாளர் அய்யாச்சாமி
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Nilgiris, Viral Video

    அடுத்த செய்தி