ஹோம் /நியூஸ் /நீலகிரி /

மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் சாலையை கடந்த யானைகள்... ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்க சென்ற சுற்றுலா பயணிகள்

மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் சாலையை கடந்த யானைகள்... ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்க சென்ற சுற்றுலா பயணிகள்

யானைகள் கூட்டம்

யானைகள் கூட்டம்

Mettupalayam | நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் யானைகள் சாலையை கடந்து சென்றன. அதனை பார்த்த வாகன ஓட்டிகள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் சிலர் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்க சென்றவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mettupalayam, India

  நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், கீழ் தட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சமவெளி பகுதிகளில் இருந்தும் உணவு தேடி காட்டு யானைக் கூட்டம் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளது.

  தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ள காட்டு யானை கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது சாலையில் உலா வந்து சாலையை கடந்து  செல்கின்றன.

  இந்நிலையில் இரண்டு குட்டிகளுடன் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம் திடீரென சாலையை கடந்து செல்ல முற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற யானைக்கூட்டத்தை பார்த்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தலைதெறிக்க வாகனத்தை திருப்பி ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்.

  Also see... தூய்மையான நகரங்கள் பட்டியலில் சென்னை,

  அப்போது, சுற்றுலா பயணிகள்  சிலர் ஆபத்தை உணராமல் வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் நோக்கத்தில் அதிக கூச்சலிட்டு யானைகளை விரட்டி புகைப்படம் எடுக்க முயற்சி  செய்தனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Elephant, Mettupalayam