ஹோம் /நியூஸ் /நீலகிரி /

Elephant Viral | யாரு இடத்துல வந்து யாருகிட்ட சீன போடுற ... யானை கூட்டத்தை விரட்டிய வனத்துறையை ஓடவிட்ட யானை

Elephant Viral | யாரு இடத்துல வந்து யாருகிட்ட சீன போடுற ... யானை கூட்டத்தை விரட்டிய வனத்துறையை ஓடவிட்ட யானை

வனத்துறை  அதிகாரியை விரட்டிய யானை

வனத்துறை அதிகாரியை விரட்டிய யானை

Elephant Viral | சிறிது தூரம் வனத்துறைக்கு செவி சாய்ப்பது போல் ஓடிய யானை கூட்டத்தில் ஒரு யானை திரும்பி நின்று விரட்டிய வனத்துறையை ஓட ஓட விரட்ட ஆரம்பித்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நீலகிரி மாவட்டம் குன்னூர்  காட்டேரி பூங்கா அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் காட்டு யானைகளை பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் வனத்துறையினரை காட்டுயானைகள் துரத்திய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த மூன்று வாரத்திற்கு மேலாக உணவு மற்றும் தண்ணீர் தேடி  காட்டுயானை கூட்டம் சுற்றி திரிகின்றது. இந்நிலையில் குன்னூர்  காட்டேரி பூங்கா அருகே  யானைக் கூட்டம் தனியார் தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டு உள்ளது. இவற்றை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே கூடி வருகின்றனர்.

குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினரும் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதனிடையே வனத்துறை அதிகாரிகள் யானை கூட்டத்தை விரட்ட முடிவு செய்து யானை கூட்டத்தின் பின்னே ஒலி எழுப்பியவாறு சப்தங்களை வைத்து விரட்ட யானைகளை பின்தொடர்ந்து சென்றனர்.

யானை கூட்டத்தை விரட்டிய வனத்துறை

சிறிது தூரம் வனத்துறைக்கு செவி சாய்ப்பது போல் ஓடிய யானை கூட்டத்தில் ஒரு யானை திரும்பி  விரட்டிய வனத்துறையை ஓட ஓட விரட்ட ஆரம்பித்தது.

வனத்துறை அதிகாரியை விரட்டிய யானை

இதனால் வனத்துறையினரும் சுற்றுலா பயணிகளும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனிடையே, வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் துன்புறுத்தாமல் இருக்கவும், சுற்றுலா பயணிகளின் அத்துமீறலை கட்டுப்படுத்தவும் வனத்துறையினர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியாளர் : குருசாமி

First published:

Tags: Elephant, Nilgiris