Home /News /nilgiris /

நள்ளிரவில் வீட்டின் சமையலறை சுவரை உடைத்து உணவு சாப்பிட்ட யானை - பரபரப்பு வீடியோ

நள்ளிரவில் வீட்டின் சமையலறை சுவரை உடைத்து உணவு சாப்பிட்ட யானை - பரபரப்பு வீடியோ

யானை

யானை

Nilgiris : மசினகுடியில் காட்டு யானை ஒன்று வீட்டின் சமையல் அறையின் சுவரை உடைத்து உணவு பொருட்களை எடுத்து உண்ணும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உதகமண்டலம் அருகே மசினகுடியில் காட்டு யானை ஒன்று வீட்டின் சமையல் அறையின் சுவரை உடைத்து உணவு பொருட்களை எடுத்து சாப்பிடும் சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மசினகுடி ஊருக்குள் சமீப காலமாக ஒற்றை காட்டு யானை இரவு நேரங்களில் உலா வருகிறது. வீடு வீடாக செல்லும் அந்த யானை வாழை, தென்னை, மா மரங்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்று இரவு குரூப்அவுஸ் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்த அந்த யானை ஒரு வீட்டின் சமையல் அறைக்கு பின்புறம் சென்றது.



    பின்னர் தலையால் முட்டி சுவரை இடித்த அந்த யானை தனது தும்பிக்கையை சமையல் அறைக்குள் விட்டு உணவு பொருட்களை தேடியது. அதனையடுத்து உணவு பொருட்களை எடுத்து சப்பிட்டதுடன் பொருட்களையும் சேதப்படுத்தியது.‘

    Must Read : இடைத்தேர்தல்.. கையெழுத்து போடப் போவது யார்? அதிமுகவில் புதிய சிக்கல்

    அந்த காட்சிகள் வீட்டினுள்ளும் வெளியிலும் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சி தற்போது வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர் - ஐயாசாமி, நீலகிரி. 
    Published by:Suresh V
    First published:

    Tags: Elephant, Ooty

    அடுத்த செய்தி