Home /News /nilgiris /

நெடுஞ்சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகள்...

நெடுஞ்சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகள்...

நெடுஞ்சாலயில் உலா வரும் யானை

நெடுஞ்சாலயில் உலா வரும் யானை

Elephant Viral Video | மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த யானைகள், குட்டியுடன் சாலையில் உலா வந்து வாகனங்களின் அருகே வந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது ...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India
    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை வனப்பகுதியை கொண்ட சாலையாக உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி சிறுத்தைகள் , காட்டு மாடுகள், சாலையோரங்களில் உலாவரும். அதிலும் நீலகிரி மலைப்பகுதிகளில் இதுப்போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. இந்நிலையில் யானை ஒன்று தனது குட்டியுடன் சாலைப் பகுதியில் சுற்றிதிரிகிற வீடியோ வைரலாகி வருகிறது.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சமீப காலமாக காட்டு யானை கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் நான்காவது கொண்டை ஊசி வளைவில் பகல் நேரத்தில் தனது குட்டியுடன் இரண்டு யானைகள் சாலையில் உலா வந்து வாகனங்களை மறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகள் எவ்வித அச்சமும் இன்றி வாகனங்களை நோக்கி வந்து சாலையில் நின்று கொண்டிருந்த சில வாகன ஓட்டிகளை நோட்டமிட்டு துரத்தும் விதமாக உலா வந்தது. இந்த காட்சியை அவ்வழியாக பயணித்த மற்றொரு வாகனத்தில் இருந்த நபர் வீடியோ எடுத்துள்ளார்.  இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.

    Read More : செய்தி வாசிப்பாளர் வாய்க்குள் புகுந்த ஈ... நேரலையில் நடந்த வைரல் சம்பவம்!


    அந்த வீடியோவில் இரண்டு யானைகள் சேர்ந்து குட்டி யானையை பாதுகாத்த வண்ணமும் அதே சமயம் அங்கிருந்த வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வண்ணமும் நடந்து செல்கின்றன. வரிசையாக வாகனங்கள் நிற்கும் அந்த பகுதியில் இரண்டு யானைகள், மிரட்டும் போக்கில் குட்டியுடன் கடந்து செல்லும் காட்சி பார்ப்பதற்கு அச்சுறுத்தும்படி இருந்தாலும் அந்த யானைகள் குட்டி யானையை பாதுகாத்து செல்வதில்தான் கவனமாக இருக்கின்றன என்பது வீடியோவில் நன்றாக தெரியும்.

    இருந்தபோதிலும் அசம்பாவிதங்கள் எதும் நடக்காமலிருக்க  சாலையில் உலா வரும் காட்டு யானைகளை வனத்துறையினர் வாகன ரோந்து மேற்க் கொண்டு அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    செய்தியாளர் : அய்யாசாமி - நீலகிரி
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Elephant, Nilgiris, Ooty, Viral, Viral Video

    அடுத்த செய்தி