Home /News /nilgiris /

மரத்தின் மீது கால்களை வைத்து பலாப்பழம் பறிக்கும் யானை.. வைரல் வீடியோ.. வனத்துறை அட்வைஸ்

மரத்தின் மீது கால்களை வைத்து பலாப்பழம் பறிக்கும் யானை.. வைரல் வீடியோ.. வனத்துறை அட்வைஸ்

பலாப்பழம் பறிக்கும் யானை..வைரல் வீடியோ..

பலாப்பழம் பறிக்கும் யானை..வைரல் வீடியோ..

Ooty | யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் கோத்தகிரி மேட்டுப்பாளையம் வழி செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் பயணிக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழம் சீசன் தீவிரமடைந்துள்ள நிலையில் காட்டு யானை ஒன்று பலா மரத்தின் மீது கால்களை வைத்து பலாப்பழத்தை பறிக்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குஞ்சபனை. மாமரம், முள்ளூர், கோழிக்கரை, தட்டப்பள்ளம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் தேயிலை, காபி  தோட்டங்களில் ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ள பலாமரங்களில் அதிக அளவு பலாப்பழங்கள் விளைந்துள்ளன. இவற்றை சாப்பிடுவதற்காக சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானைக் கூட்டங்கள் பலாமரங்கள் நிறைந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளது.

    இந்நிலையில் மாமரம் பகுதியில் இருந்து கோழிக்கரை செல்லும் சாலையில் காட்டு யானை ஒன்று வனப்பாதையில் உள்ள பலா மரத்தின் மீது கால்களை வைத்து பலாப்பழத்தை பறித்துள்ளது. இந்த காட்சியை அவ்வழியாக சென்ற பாதசாரி தனது கைப்பேசி மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தற்போது வைரலாகி வருகிறது. பலாப்பழம் சீசன் என்பதால் பலா மரங்கள் அதிக அளவு குடியிருப்பு நிறைந்த பகுதிகளிலும் உள்ளதால் யானைகள் இவற்றை உண்பதற்காக அடிக்கடி குடியிருப்பு மற்றும் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வருகிறது.

    Also Read : ஆர்ப்பரித்துக் கொட்டும் அதிரப்பள்ளி அருவி.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..


    எனவே இப்பகுதியில் முகாமிட்டு உள்ள காட்டு யானை கூட்டங்கள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.யானைக் கூட்டங்கள் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தால் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்,உலா வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    இரவு நேரங்களில் கோத்தகிரி மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் இருசக்கர நான்குசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகவும் கவனமுடன் பயணிக்க வேண்டும் எனவும்‌, சாலைகளில் உலா வரும் வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து அவற்றை தொந்தரவு செய்யக்கூடாது எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Elephant, Ooty, Viral

    அடுத்த செய்தி