Home /News /nilgiris /

தாய் யானையை பிரிந்த குட்டி 3 நாட்களுக்கு பிறகு தாயுடன் சேர்த்துவைப்பு

தாய் யானையை பிரிந்த குட்டி 3 நாட்களுக்கு பிறகு தாயுடன் சேர்த்துவைப்பு

தாயுடன் யானை குட்டி சேர்ப்பு

தாயுடன் யானை குட்டி சேர்ப்பு

மூன்று நாட்களுக்குப் பின் தாயை பிரிந்த குட்டி யானையை மீண்டும் தாய் யானையுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர் ...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நீலகிரி மாவட்டம் உதகை அருகே தாயைவிட்டு பிரிந்த குட்டி யானை 3 நாட்களுக்குப் பிறகு தாயுடன் சேர்த்துவைக்கப்பட்டது.

    உதகை அருகே மசனகுடி வாழைத்தோட்டம் சீகூர் ஆற்றில்
    கடந்த 29 தேதி  திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் பிறந்து சில மாதங்களே ஆன யானை குட்டி அடித்து வரப்பட்டு வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குட்டி யானையை அதன் தாயுடன் சேர்த்து வைக்க வனத் துறையினர் கடந்த 3 நாட்களாக வனப்பகுதியில் பல இடங்களில் தாய் யானையை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று வனப் பகுதியில் இருந்த ஒரு யானையைக் கண்ட வனத்துறையினர் குட்டியின் மீது மண் மற்றும் சாணத்தை பூசி வனத்தில் இருந்த யானையிடம் அனுப்பி வைத்தனர். சத்தமிட்டபடி குட்டியானை  தாய் யானையுடன் சென்றதை வனத்துறையினர் உறுதிப்படுத்தினர்.



    மூன்று நாட்களாக தாயைப் பிரிந்த குட்டியானை நடத்தி வந்த பாசப் போராட்டம் வனத் துறையினர் மேற்கொண்ட தீவிர முயற்சியில் முடிவுக்கு வந்தது. குட்டி யானையை அதன் தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    செய்தியாளர்: ஐயாசாமி- நீலகிரி
    Published by:Murugesh M
    First published:

    Tags: Elephant, Elephant and calf, Nilgiris

    அடுத்த செய்தி