கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதில் ஜெயலலிதவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டதில் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கின் புதிய திருப்பமாக தனிபடை போலிசார் கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோருக்கு தொடர்ப்பு இருப்பது தெரிய வந்ததால் அவர்கள் இருவரும் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ளனர்.
வழக்கு விசாரணை கொடநாடு மேலாளர் நடராஜன், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அதிமுக பிரமுகர் சஜீவன் என இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றயில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சயான், வாளையாறு மனோஜ், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகியோர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சாஜகான் மற்றும் கனகராஜ் உள்ளிட்டோர், தனிபடை போலிசார் இது வரை 267 பேரிடம் விசாரித்துள்ளதாகவும் கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் பாலக்காடு அருகே வாகன விபத்தில் உயிரிழந்த சயானின் மனைவி, மகள் இறப்பு குறித்து தடயங்களை சேகரிக்க முடியவில்லை என்றும் கனகராஜின் விபத்தில் உயிரிழந்த வழக்கின் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தொடக்கத்தில் விசாரித்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறையினரிடமும் விசாரிக்க முடிவு செய்யபட்டுள்ளதாக தெரிவித்தனர். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
செய்தியாளர் - ஐயாசாமி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Court Case, Jayalalithaa, Kodanadu estate, Murder case, Nilgiris