Home /News /nilgiris /

உதகையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் 'சைக்லோமைன்' மலர்கள்

உதகையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் 'சைக்லோமைன்' மலர்கள்

உதகையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் 'சைக்லோமைன்' மலர்கள்

உதகையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் 'சைக்லோமைன்' மலர்கள்

Udhagamandalam | உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் 'சைக்லோமைன்' மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India
    உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது 'சீசன்' துவங்கியுள்ளது. இதற்காக, கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்ட் ஆஸ்டர், வெர்பினா, லுாபின், காஸ்மஸ், பாப்பி, கூபியா,ஸ்வீட் வில்லியம், அஜிரேட்டம், கிரைசாந்திமம், ஹெலிக்கேலண்டுமா, ரைசம், சப்னேரியா என 60 வகையான மலர்கள் பூங்காவில் தயாராக உள்ளன.

    இதுமட்டுமன்றி, 10,000 மலர் தொட்டிகளில் சால்வியா, டெல்பினியம், ஆந்தூரியம், கேலா லில்லி போன்ற 30வகையான மலர்கள் தயார்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. கண்ணாடி மாளிகையில், 500 தொட்டிகளில் வெள்ளை சிவப்பு,  போன்ற வண்ணங்களில் 'சைக்லோமைன்' மலர்கள் அதிகமாக பூத்துள்ளது சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

    பூங்கா நிர்வாகம் கூறுகையில், 'அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது 'சீசன்' துவங்கியுள்ள நிலையில் 4 லட்சம் மலர்கள், மாடங்களில் காட்சிப்படுத்த, 10,000 தொட்டிகளில் மலர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

    Also see... ஓசூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது இந்துக்களுக்கு குளிர்பானம் வழங்கிய இஸ்லாமியர்கள்..

    இந்தமுறை இரண்டாம் சீசனுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தனர்.

    செய்தியாளர்: ஐயாசாமி, உதகை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Nilgiris, Ooty, Park

    அடுத்த செய்தி