Home /News /nilgiris /

ஊட்டி மலை ரயில் பாதை தண்டவாளத்தில் ஓடிய கரடிகள்... ரயிலின் வேகம் குறைக்கப்பட்டதால் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

ஊட்டி மலை ரயில் பாதை தண்டவாளத்தில் ஓடிய கரடிகள்... ரயிலின் வேகம் குறைக்கப்பட்டதால் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

ரயில் பாதையில் ஓடிய கரடி

ரயில் பாதையில் ஓடிய கரடி

Ooty : ஊட்டி மலை ரயில் பாதையில் ரயில் சென்றுகொண்டிருந்த போது தண்டவாளத்தில் ஓடிய இரண்டு கரடிகளை பார்த்த ஓட்டுனர் ரயிலின் வேகத்தை இயக்கினார்.

    குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், மலை ரயில் சென்றுகொண்டிருந்த போது தண்டவாளத்தில் இரண்டு கரடிகள் ஓடின. அப்போது மலை ரயில் ஓட்டுனர் வேகத்தை குறைத்ததால் கரடிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற பாரம்பரிய புகழ்பெற்ற மலை ரயிலில் சுமார் 100-க்கும் மேற்பட்ட  பயணிகளுடன் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றுகொண்டிருந்தது. பயணிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே சென்றனர்.

    அப்போது காட்டேரியில்  இருந்து ஹில் குரோவ் (Hill Grove) செல்லும் மலை ரயில் தண்டவாளத்தில் ஆடர்லி மலை ரயில் பாதையில் உள்ள குகை அருகில் மலை ரயில் சென்று கொண்டிருந்தபோது, கரடி ஒன்று மலை ரயில் தண்டவாளத்தில் ஓடுவதைப் பார்த்த மலை ரயில் இன்ஜின் ஓட்டுனர் ரயிலின் வேகத்தை குறைத்தார்.

    கரடிகள்


    அப்போது இரண்டு கரடிகள் மலை ரயில் தண்டவாளத்தில் ஓடியன. அதை சுற்றுலாப்பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். அத்துடன், அவைகளை வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர்.

    Must Read : “ஆடியோ பொன்னையன் உடையது தான்” - சர்ச்சை ஆடியோ குறித்து கன்னியாகுமரி நிர்வாகி கோலப்பன் விளக்கம்

    அந்த கரடிகள் இரண்டும் வனப்பகுதிக்குள் சென்ற பிறகு மலை ரயிலை  ஓட்டுனர் வேகமாக இயக்கினார்.

    செய்தியாளர் - ஐயாசாமி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ooty

    அடுத்த செய்தி