Home /News /nilgiris /

முதுமலையில் ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை.. பதைபதைப்புடன் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

முதுமலையில் ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை.. பதைபதைப்புடன் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை

ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை

Elephant : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வனப் பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற சுற்றுலா பயணிகளை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக விரட்டியது.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் நாள்தோறும் வனத்துறை வாகனங்களில் சுற்றுலா பயணிகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்வது வழக்கம். அப்படி வனப்பகுதிக்குள் செல்லும் சுற்றுலாப்பயணிகள் யானை, மான், கரடி காட்டெருமை, புலி , சிறுத்தை என அனைத்து வன விலங்குகளையும் அரிய வகை பறவை இனங்களையும் கண்டு ரசிக்கின்றனர்.

    இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனத்துறை வாகனத்தில் சுற்றிப் பார்க்கச் சென்ற சுற்றுலா பயணிகள் அங்கே யானை கூட்டம் இருப்பதைப் பார்த்தனர். யானைகளை கண்டு ரசிக்க வசதியாக,  ஓட்டுனர் வானத்தை  மெதுவாக ஓட்டினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    யானை கூட்டம்


    வாகனத்தில் இருந்தவாறே சுற்றுலா பயணிகள் யானை கூட்டத்தை கண்டு ரசித்ததுடன், போட்டோ, வீடியோக்களையும் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக யானை கூட்டத்திலிருந்த காட்டு யானை ஒன்று திடீரென ஆக்ரோஷத்துடன் அந்த வாகனத்தை நோக்கி ஓடிவந்தது.

    Must Read : போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் திடீர் நீரூற்று - வியப்பில் ஆழ்ந்த திருச்சி மக்கள்

    இதனால், அதில் இருந்த பலர் பதற்றத்துடன் கத்தத் தொடங்கினர். யானை நெருங்கி வந்ததை கவனித்த ஓட்டுனர், வாகனத்தை வேகமாக ஓட்டினார். அந்த யானை வாகனத்தை துரத்திக்கொண்டு சிறிது தூரம் ஓடி வந்தது.  ஓட்டுனர் வாகனத்தை மேலும் வேகமாக இயக்கியதால் சுற்றுலா பயணிகள் தப்பினர். பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் - ஐயாசாமி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Elephant, Nilgiris, Tourist spots

    அடுத்த செய்தி